அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலிய வீரரை 3-1 என கைப்பற்றி ரபேல் நடால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் பிரிவுக்காகன முதல் சுற்றில் ரபேல் நடால் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ரின்கி ஹிச்கதா மோதினர். முதல் செட்டை 4-6 என கைவிட்டாலும், இரண்டாம் செட்டை 6-2 எனவும், மூன்றாம் செட்டை 6-3 மற்றும் நான்காவது செட்டை 6-3 கைப்பற்றி ரபேல் நடால் அசத்தினார்.
2019ம் ஆண்டுக்கு பிறகு ரபேல் நடால் வெற்றி பெறும் முதல் அமெரிக்க ஓபன் போட்டியாக இது பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு விம்பிள்டன் தொடரின் அரையிறுதி சுற்றில் காயம் காரணமாக வெளியேறிய ரபேல் நடால், இந்தமுறை அமெரிக்க ஓபன் போட்டியில் களமிறங்கியுள்ளார். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத காரணத்தால் ஜோகோவிச் நடப்பாண்டு அமெரிக்க ஓபன் போட்டியிலும் பங்கேற்க இயலாத நிலையில், இந்த முறை ரபேல் நடால் மீது பார்வை திரும்பி இருப்பது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது







