ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஊழியர்களை தாக்கியதால் உள்ளிருப்பு போராட்டம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளராக சுமார் 150 பேர் வேலை பார்த்து…

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளராக சுமார் 150 பேர் வேலை பார்த்து வருகின்றனர் . இவர்களை நோயாளியை அழைத்து வந்த அட்டெண்டர் வீரசேகரன் என்பவர் திடீரென சரமாரியாக தாக்கியுள்ளார் இதில் காவலாளிகள் முருகன், நந்தீஸ்வரன் தாக்கப்பட்டனர். இதபற்றி போலீசாரிடம் புகார் அளித்தும் இதுவரை போலீசார் எந்த நடவைக்கையும் எடுக்கவில்லை.

எனவே பணியில் பாதுகாப்பு கேட்டு ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது குறித்து பெண் தொழிலாளரான மார்க்ரேட் கூறிய போது ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வரும் எங்களுக்கு பணியின் போது பாதுகாப்பு இல்லை.மேலும் தொழிலாளர்களான நந்தீஸ்வரன், முருகன், இருவரும் தாக்கப்பட்டுள்ளனர். நாங்கள் மருத்துவமனையில் செக்யூரிட்டியாகவும் உதவியாளர்களாகவும் பல்வேறு பணிகளை இங்கே செய்து வருகிறோம்.

 

மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து வரும் அட்டெண்டர்கள் தவறான வார்த்தைகளில் பேசி எங்களை தாக்கி வருகின்றனர். இது போன்ற செயலை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் போலீசார் பாதுகாப்புக்கு இருந்தால் மட்டுமே நாங்கள் பணி செய்ய முடியும் என்பதை தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர் .இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்பு செய்தி: தாக்கப்படும் மருத்துவர்கள் காக்கப்படுவார்களா?

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.