முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் – சித்ரவதை அரங்கேறிய அறைகளின் காட்சிகள் வைரல்…!

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்ட இரண்டு சிறார்கள் தாங்கள் தாக்கப்பட்டபோது காவல்நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கேட்டு மனு அளித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டார். ஏற்கனவே முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்த அமுதா, 2வது கட்ட விசாரணையை தொடங்கினார். இதையடுத்து ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது மூன்று பிரிவுகளின்கீழ் திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் அம்பாசமுத்திரம் காவல்நிலையத்துக்கு விசாரணைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்கள் தாங்கள் தாக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகளை தங்களிடம் சமர்ப்பிக்கக் கோரி காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : என் தந்தையை காணவில்லை! – திரிணாமுல் காங். மூத்த தலைவரின் மகன் பரபரப்பு பேட்டி 

இதனிடையே மனித உரிமைகள் அமைப்பான மக்கள் கண்காணிப்பக வழக்கறிஞர்களிடம் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சம்பவம் நடைபெற்ற காவல்நிலையத்தின் அறைகளைக் காட்டி விளக்கியுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram