குன்னூர் மாரியம்மன் கோயிலில் தானிய உணவுத்திருவிழா!

தானிய வகைகளை ஊக்குவிக்கும் வகையில் குன்னூரில் உணவுத் திருவிழா நடைபெற்றது. குன்னூர் நகரில் தற்பொழுது மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழா ஒரு மாதம் நடைபெறும். இன்று நடைபெற உள்ள திருத்தேர்…

தானிய வகைகளை ஊக்குவிக்கும் வகையில் குன்னூரில் உணவுத் திருவிழா நடைபெற்றது.

குன்னூர் நகரில் தற்பொழுது மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.
இவ்விழா ஒரு மாதம் நடைபெறும். இன்று நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்தை
முன்னிட்டு, குன்னூர் தனியார் அரங்கில் நடைபெற்ற உணவு திருவிழாவில், கேழ்வரகு
அடை, கேழ்வரகு களி, சேனைக்கிழங்கு வடை, மசாலா மோர், வெஜிடபிள் கோலா, சத்து
மாவு, இனிப்பு பலகாரம், கருப்பட்டி லட்டு/ சுகி உருண்டை, பாசிப்பயிறு உப்புமா,
உட்பட பல்வேறு உணவுப் பொருட்கள் உணவு திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

—-ரெ..வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.