மார்ச் 9-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

வருகிற 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  அதிமுக சார்பில் போட்டியிட்ட  தென்னரசு 43,981…

வருகிற 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  அதிமுக சார்பில் போட்டியிட்ட  தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார். ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,  ஜனநாயக முறைப்படி இந்த இடைத்தேர்தல் நடைபெற்றிருந்தால் கழகம் மகத்தான வெற்றி பெற்றிருக்கும். ஆனால், திமுகவினர் பனநாயகத்தின் மூலமாக காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார்.

அண்மைச் செய்தி : “மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருக்கிறோம்; தேர்தலுக்காக அல்ல” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  வரும் 9 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. உச்சதீர்ப்பின்படி எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்த பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது. ஈரோடு கிழக்கு தேர்தலில் தோல்விக்கான காரணம், அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.