மதுரையில் பிரதமர் மோடி ; ரூ.4,400 கோடி மதிப்பிலான தொடங்கி வைப்பு….!

மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்திய பிரதமர் மோடி மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசு விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில்  ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, மத்திய – மாநில அமைச்சர்கள், அரசுத்துறை அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் படி  அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட காரைக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூா், சோழவந்தான், மணப்பாறை, திருவாரூா், மொரப்பூா், பொள்ளாச்சி, பொம்மிடி ஆகிய 8 ரயில் நிலையங்களையும், சென்னை கடற்கரை – எழும்பூா் நான்காவது ரயில் தடத்திலான சேவையையும் மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தார்.

மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மரக்காணம் – புதுச்சேரி, பரமக்குடி – ராமநாதபுரம் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிக்கு பிரதமா் அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து கும்பகோணம், ஏற்காடு, வேலூர் ஆகிய மூன்று புதிய ஆகாசவாணி பண்பலை வானொலி நிலையங்கள் நாட்டுக்கு  அர்பணித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.