முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானின் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜஸ்சி இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் முதலீட்டை விரிவுபடுத்துவது ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

அமேசான் சி.இ.ஓ உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஆன்டி ஜஸ்சியுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் 4 ஆயிரத்து 800 கோடி டாலர் முதலீட்டை வரவேற்கிறேன். இது நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். முதலீடுகளுக்கு விருப்பமான இடமாக இந்தியா உருவெடுத்து இருப்பதை இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




