முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

சென்னையில் 61,700 இல்லங்களில் மின் இணைப்பு துண்டிப்பு

சென்னையில் 61,700 இல்லங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னைக்கு அருகே 80 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தலைநகரின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது. தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது காற்று வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொடர்மழை காரணமாக சென்னையில் 61, 700 இல்லங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் காற்றின் அளவை பொறுத்து மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் மொத்தம் 44 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. அதில் 61,700 மின் இணைப்புகள் மட்டுமே துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மருத்துவமனைகளில் எந்தவித தடையுமின்றி தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’அதிகாரம்’

Gayathri Venkatesan

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்பு

Halley karthi

“இந்திய கலாச்சாரத்தின் மதிப்பிட முடியாத பரிசு யோகா”: பிரதமர் மோடி

Vandhana