சென்னைக்கு அருகே 80 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில், செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரமாக, 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவித்தார்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு அருகே 80 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாகவும் கூறினார்.மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெறாது எனவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை 3 இடங்களில் அதி கனமழையும், 23 இடங்களில் மிக கனமழையும், 21 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.








