முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

1,500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர்

தமிழ்நாடு முழுவதும் 1,500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை அடுத்த மாந்தோப்பு பகுதியில், நடமாடும் மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை, அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இயங்கி வருவதாக தெரிவித்தார். அதில் சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் , நீர்த்தேக்கம் இருக்கும் பகுதிகளில் இந்த வாகனங்கள் சென்று மருத்துவ சேவைகளை வழங்கும் என உறுதி அளித்தார்.

சுகாதாரத்துறை சார்பில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் 4,055 இடங்களில் பருவ மழைக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதாகவும், இந்த முகாம்களில் 1,53,000 கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் கூறிய அமைச்சர், ழைக் காலத்தில் ஏற்படுகிற காய்ச்சல் இருமல் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு நோய்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு அதிகரிப்பு!

Halley karthi

டீசல் விலையை குறைக்காவிட்டால் போராட்டம்: தென்னிந்திய லாரி உரிமையாளர் நலச்சங்கம்

Vandhana

தமிழக கொரோனா நிலவரம் : கடந்த ஒரே நாளில் 293 பேர் உயிரிழப்பு!

Jeba Arul Robinson