மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பஞ்சட்டி, அண்ணாநகர் மேற்கு, ஆவடி ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் வரை இன்று மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பஞ்சட்டி, அண்ணாநகர் மேற்கு, ஆவடி ஆகிய பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன், மின்விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.







