#RainAlert – அடுத்த 3 மணிநேரத்திற்கு 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையின் வேகம் குறைந்து, பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில…

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையின் வேகம் குறைந்து, பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்படுகிறது. எனினும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில்இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை அடுத்த மூன்று மணிநேரத்திற்கு பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.