விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு : கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு…..!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் தரப்பில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள இடங்களின் சிசிடிவி காட்களை ஆய்வு செய்ததில் சாயல்குடியைச் சேர்ந்த  தர்ம முனீஸ்வரன் (30) என்ற வாலிபரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் தர்ம முனீஸ்வரனை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா, தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்தார். மேலும் அவர் தர்ம முனிஸ்வரனை வருகிற ஏப்ரல் 2ம் தேதி மீண்டும் ஆஜர் படுத்தவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.