சிந்து நதி நீர் விவகாரம் ; ஐநாவில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா….!

பயங்கரவாதத்திற்கான ஆதரவு வழங்குவதை பாகிஸ்தான் நிறுத்தாத வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று ஐநாவில் இந்தியா தெரிவித்துள்ளது.

2026 உலக நீர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹரீஷ் பர்வதனேனி, கூறியதாவது ;

”அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதி ஒப்பந்தத்தில் நம்பிக்கையுடனும், நல்லெண்ணம் மற்றும் நட்புறவு உணர்வுடனும் இந்தியா கையெழுத்திட்டது. ஆனால் , பாகிஸ்தான் போர்கள் மூலமாகவும், பயங்கரவாதத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதன் மூலமாகவும் இந்தப் புரிதலை மீறிவிட்டது.

எங்களின் பொறுமையும் பெருந்தன்மையும் பாகிஸ்தானின் போக்கை மாற்றவில்லை. பாகிஸ்தான் அனைத்து வகையான பயங்கரவாதத்திற்குமான தனது ஆதரவை நம்பகத்தன்மையுடன் முடிவுக்குக் கொண்டுவரும் வரை, இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்க நாங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு என்பது இருவழிப் பாதை. பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை நிபந்தனையின்றித் துறக்க வேண்டும். ஒப்பந்தங்களின் புனிதத்தைக் காப்பது பற்றிப் பேசுவதற்கு முன்பு மனித உயிரின் புனிதத்தைக் காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.