மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான சிறந்த தீர்வுகளைக் கண்டறிய உத்தர பிரதேச மாநிலத்தின் திட்டக்குழு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் மற்றும் இங்குச் செயல்படுத்தப்படும் தனித்துவமான சுகாதாரத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதே இவர்களின் முதன்மை நோக்கம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் இந்த ஆரோக்கியமான போக்கு மென்மேலும் வளர வேண்டும் என விழைகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள விருந்தினர்களை நம் மக்களின் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்.
மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பதில் மட்டுமல்ல; மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை, சமூகநீதி ஆகியவற்றிலும் தமிழ்நாட்டின் திராவிடநாடு மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி”
என்று கூறியுள்ளார்.







