பிரீமியம் பெட்ரோல் விலை உயர்வு – லிட்டருக்கு எவ்வளவு உயர்ந்துள்ளது……….?

இந்தியாவில் பிரீமியம் பெட்ரோல்களின் விலை உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்கு கச்ச எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அண்மை காலத்தில் வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்களை ஈரான் தாக்கியது. இந்த இரண்டு நிகழ்வுகளின் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலர் என்ற எல்லையைத் தாண்டியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் பிரீமியம் பெட்ரோல்களின் விலை உயர்ந்துள்ளது. இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி BPCL-இன் ‘ஸ்பீட்’, HPCL-இன் ‘பவர்’ மற்றும் IOCL-இன் ‘Xபி95’ ஆகிய பெட்ரோல் வகைகளின் விலைகள், லிட்டருக்கு ரூ. 2.09 முதல் ரூ. 2.35 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விலை உயர்வு மார்ச் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதே நேரம் சாதாரண பெட்ரோலின் விலையில் தற்போது எவ்வித மாற்றமும் இல்லை.

பிரீமியம் பெட்ரோல்

வாகன இன்ஜின்களின் மென்மையான செயல்பாடு மற்றும் எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றுக்காக பிரீமியம் பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. இந்த பெட்ரோல் வாகன இன்ஜின்கலில் படியும் கார்பன் துகள்களை அகற்றுவதோடு, வாகன புகையைக் குறைத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் தடுக்கிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.