மாலை 4 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை விலகியுள்ளது என்றும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள், ராயலசீமா, கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்கள், கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், சேலம், ஈரோடு, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.