கோவையில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்கிறார் டைகர் முத்துவேல்பாண்டியனான ரஜினிகாந்த். அவரை அரசு அதிகாரியான பகவதிபெருமாள் வம்பு இழுக்கிறார். அந்த ஏரியா காமெடி தாதாவான நமோ நாராயணாவும் சீணடி, ரஜினியை தனது டிரைவர் ஆக வைத்து இம்சை கொடுக்கிறார். தான் யார் என்பதை சொல்லாமலே, சில பல வேலைகளை செய்து கலகலப்பூட்டுகிறார் ரஜினிகாந்த். அந்த சமயத்தில் முதற்பாகத்தில் ரஜினியால் கொல்லப்பட்ட விநாயகன் நண்பனான வில்லன் சுராஜ்வெஞ்சரமூடு பழி வாங்க
ரஜினியை தேடுகிறார். பல ஆயிரம் கோடி சிலைகளை இழந்த சிலை கடத்தல் டான் எஸ்.ஜே.சூர்யாவும் தேடுகிறார். இவர்கள் பிடியில் ரஜினி சிக்கினாரா? இவர்களுக்கு எப்படி தனது பாணியில் பதிலடி கொடுக்கிறார். மகனை கொன்றது ரஜினிதான் என்ற உண்மை அவரின் குடும்பத்துக்கு தெரிந்ததா என்பது ஜெயிலர் 2 படத்தின் கதை
ஆரம்பம் முதல் கடைசிவரை பக்கா, மாஸ் திரைக்கதையில் படத்தை நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குனர் நெல்சன். கோவையில் ரஜினிகாந்த் அப்பாவியாக சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் காட்சிகள், நமோநாராயணாவை வில்லன் டீமில் சிக்க வைக்கும் காட்சிகள், சிலை கடத்தும் யோகிபாபுவை வம்பு இழுக்கும் இடங்கள் செம கலகலப்பு. குறிப்பாக, ரஜினிகாந்த், நமோ நாராயணா, யோகிபாபு சீன்கள் பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறது. அதற்கேற்க ரஜினிகாந்த் கேரக்டரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வில்லன் சுராஜ்வெஞ்சரமூடு, ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட சீன்கள், சுராஜ்வெஞ்சரமூடு, அவரிடம் சிக்கி படாதபாடு படம் நமோ நாராயணா சீன்கள் பக்கா கமர்ஷியல். ஒரு கட்டத்தில் ரஜினியை தேடி, இன்னொரு பெரிய வில்லன் எஸ்.ஜே.சூர்யா வர, கதை ஆக் ஷன் பாதைக்கு மாறுகிறது
காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் ஸ்கோர் செய்து, பல ஹீரோயிச சீன்களில் அசால்டாக நடித்து கைதட்டல் வாங்குகிறார். 50வது ஆண்டு சினிமா பயணத்தில், 75வயதில் ரஜினியின் நடிப்பு, ஆர்வம் பிரமாதம். குறிப்பாக, ஆக் ஷன் காட்சிகளில் அவருக்கு கொடுக்கிற பில்டப், அவரின் பக்கா பிளான், கிளைமாக்ஸ் எல்லாமே செட்டாகி இருக்கிறது. ஆரம்பத்தில் ஆங்காங்கே காமெடி செய்கிறார். மற்றர்களை மாட்டிவிட்டு ரசிக்கிறார். அதெல்லாம் சுவாரஸ்யம். இரண்டாம் பாதியில் வில்லி வித்யாபாலன் பார்த்து அவர் அடிக்கிற டயலாக், எனக்கு போனில் குட்மார்னிங் வரலை என கிண்டல் செய்வது, காபி கேட்கும் சீன்கள் ரஜினிக்கே உரிய மாஸ் சீன்கள். அவர் ரசிகர்களுக்கு இந்த படம் செம விருந்து
படம் முழுக்க நெல்சன் பாணி பிளாக் காமெடி வருகிறது. அது பல இடங்களில் வொர்க் அவுட்டாகி இருப்பது படத்தின் பிளஸ். நமோ நாராயணா, யோகிபாபு, இன்னும் பலர் சிரிக்க வைக்கிறார்கள். வில்லன்களில் முதற்பாதியில் சுராஜ்வெஞ்சரமூடு மிரட்டியிருக்கிறார். அவரின் கெட்அப், டயலாக் நச். அடுத்த பாதியில் தனக்கே உரிய பாணியில் எஸ்.ஜே.சூர்யா கலக்கியிருக்கிறார். வித்யாபாலனும் ஸ்டைலிஷ் வில்லியாக வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட குட்மார்னிங், காபி சீன்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இவர்களின் அப்பாவாக வரும் நடிகர் மிதுன்சக்ரவர்த்தி கேரக்டரும், நடிப்பும் கூட மாஸ். கோவா காட்சிகளில் பிரமாண்டம் இருக்கிறது. வில்லன்களை ரஜினி சமாளிக்கும்விதம், அவர்களுக்கு தன் ஸ்டைலில் பதிலடி கொடுக்கும் விதம் அருமை.
முதற்பாதியில் ரம்யாகிருஷ்ணன், மிர்ணாவுக்கு அதிக சீன் இருந்தது. இதில் மிஸ்சிங். இந்த பாகத்திலும் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கிஷெராப் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் முக்கியமான சீனில் வந்து கவர்கிறார்கள். இந்தி நடிகர் ஹிர்த்திக்ரோஷனும் ஒரு கவுரவ ஆக் ஷன் காட்சியில் வந்து ஸ்கோர் செய்து இருக்கிறார்
நெல்சனின் கதை, திரைக்கதை, திருப்பங்கள், காமெடி டச் படத்தை விறுவிறுப்பாக்கி இருக்கிறது. குறிப்பாக, அனிருத் பின்னணி இசை, பாடல்கள் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. பின்னணி இசை அவ்வளவு பவர்புல். பூர்ணா சாங், நேரா பதேஹி சாங் கலர்புல் விருந்து. கோவை, கேரளா காட்சிகள், ஆக் ஷன் காட்சிகளில் விஜய்கார்த்திக் ஒளிப்பதிவு அவ்வளவு அழகு. சேத்தன் சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது. ஆரம்பம் முதல் கடைசிவரை ரசிகர்கள் பல்ஸ் உணர்ந்து போராடிக்காமல் படத்தை கொண்டு சென்று இருக்கிறார் நெல்சன். சிலை கடத்தல் கதை என்றாலும், ஹீரோ வில்லன் மோதலில் பல புதுமைகள் செய்து இருக்கிறார். நிறைய கேரக்டரை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கும் நல்ல சீன் கொடுத்து படத்தை ரசிக்க வைத்து இருக்கிறார்.
ரஜினிக்கு நடிக்க அதிக வாய்ப்பு இல்லை, பரபர பன்ச் டயலாக் இல்லை. அவர் ஸ்டைல் டான்ஸ், சண்டைக்காட்சி குறைவு என்றாலும், அவரை ரசிக்கலாம். பல இடங்களில் ஹீரோயிச சீன்களில் ரஜினி மாஸ் பண்ணியிருக்கிறார். தான் அதிகம் நடிக்காமல், தான் அதிக காட்சிகளில் பங்கு பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், எல்லாரையும் நடிக்க வைத்து, அந்த வெற்றியை தனக்கு சாதகமாக மாற்றியிருக்கிறார் ரஜினிகாந்த். காமெடி, ஆக் ஷன், பாடல், பிரமாண்டம் ஆகியவை படத்தை பிரமிப்பாக்கி, பார்வையாளர்களை கட்டிபோடுகிறது.
ரஜினி ரசிகர்கள் படத்தை கொண்டாடுவார்கள். வழக்கமான சினிமா ரசிகர்களும் ஜெயிலர் 2-வை ரசிப்பார்கள். ஜெயிலர் 3-வது பாகத்துக்கும் கிளைமாக்சில் ஒரு டுவிஸ்ட் வைத்து படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் நெல்சன்.
மீனாட்சிசுந்தரம் சிறப்பு செய்தியாளர்




