“தொகுதிகள் கூடினாலும் திமுகவுக்கு வெற்றி கிடைக்காது!” – அமைச்சர் மரிய வில்சன் அதிரடி!

தொகுதி மறுவரையறையால் எத்தனை தொகுதிகள் அதிகரித்தாலும் தமிழகத்தில் தவெகவே வெற்றி பெறும் என்றும், 2029 தேர்தலில் திமுகவால் வெற்றி பெற முடியாது என்றும் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

2029-ல் திமுகவால் வெற்றி பெற முடியாது!

சென்னை பெரியமேட்டில் இன்று (நவ. 29) நடைபெற்ற தவெக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திமுகவை விமர்சித்து நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நம் கூட்டம் நடக்கும் நேரத்தில் வேறு ஒரு இடத்தில் வேறு ஒரு கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகள் அதிகரித்தாலும் தவெக வெல்லும். 2029-ல் திமுகவால் வெற்றி பெற முடியாது. எத்தனை தொகுதிகள் அதிகரித்தாலும் சரி, குறைந்தாலும் சரி, உங்களால் வெற்றி பெற முடியாது. முதல்வர் விஜய்யின் கோட்டை தமிழ்நாடு” என்றார்.

6 மாதங்களில் வரி வருவாய் 12.8% அதிகரிப்பு!

தொடர்ந்து தமிழக அரசின் நிதி நிலைமை குறித்துப் பேசிய அவர், நிதி ஆதாரங்களைப் படிப்படியாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நிதி ஆதாரங்களை நாம் படிப்படியாக அதிகரித்து வருகிறோம். தமிழ்நாட்டில் 6 மாதங்களில் சொந்த வரி வருவாய் 12.8% அதிகரித்துள்ளது. ரூ.1.7 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் ரூ.1.20 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. வெளிப்படையான அரசாங்கம் நடப்பதால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது” என்றார்.

ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை!

கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாகவும் அமைச்சர் மரிய வில்சன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “கடந்த ஆட்சியில் எந்தத் துறையில் ஊழல் நடந்தாலும் கொண்டுவாருங்கள். நடவடிக்கை எடுப்போம். அடுத்தடுத்த நாள்களில் இன்னும் அதிகமாக வழக்குகள் பதிவு செய்யப்படும். 2029-ல் தில்லிக்கே உங்களால் செல்ல முடியாது. அந்த நிலை ஏற்படும்” என்று திமுகவை விமர்சித்துப் பேசினார். தொகுதி மறுவரையறை விவகாரம், 2029 சட்டமன்றத் தேர்தல் மற்றும் கடந்த ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மரிய வில்சன் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.