பொன்னியின் செல்வன் இசைவெளியீடு முக்கியமான தருணம்- ஏ.ஆர்.ரகுமான்

பொன்னியின் செல்வன் இசை வெளியீடு முக்கியமான தருணம் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார்.  மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன்…

பொன்னியின் செல்வன் இசை வெளியீடு முக்கியமான தருணம் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார். 

மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஜெயரம் ரவி, கார்த்தி, த்ரிஷா, நாசர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இந்த இசை வெளியீடு மிகவும் முக்கியமான தருணம் என்றும், இந்த படம் 10 வருடத்திற்கு முன்பு திட்டமிடப்பட்டது என்றும் கூறினார். இந்த படத்தை எத்தனையோ பேர் எடுக்க முயற்சி செய்துள்ளனர். இறுதியில் மணிரத்னம் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த நாவல் படிக்கும் போது ஒவ்வொரு அனுபவம் இருக்கும். இந்த காலகட்டத்திற்கு உண்டான அனுபவத்தை  இந்த படம் கொடுக்கும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் இசையமைத்த முதல் படமான ரோஜா படத்திலிருந்து பொன்னியின் செல்வன் வரை 30 ஆண்டுகளாக எங்கள் கூட்டணி தொடர்கிறது என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.