முக்கியச் செய்திகள் சினிமா

பொன்னியின் செல்வன் டீசர் – புதிய அப்டேட்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் நாளை மாலை வெளியாக உள்ளது.

வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். முதல் பாகத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரையரங்கில் வெளியாகும் என படகுழு அறிவித்துள்ளது. அதே நேரத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை படகுழு வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், வந்திய தேவனாக நடித்துள்ள கார்த்திக், நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்களை படகுழு வெளியிட்டிருந்தது. தற்போது த்ரிஷா நடித்துள்ள குந்தவை கதாப்பாத்திரத்தின் புகைப்படத்தை படகுழு வெளியிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்கள் ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெற உள்ளது. படகுழு மற்றும் முக்கிய பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். ஏற்கனவே பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா தஞ்சாவூரில் நடைபெற இருந்தது ஆனால் சில காரணங்களால் அங்கு டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. இந்த நிலையில் தற்போது நாளை மாலை சென்னையில் பிரம்மாண்டமாக டீசர் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. நாளை மாலை டீசர் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் தற்போது ஆர்வமாக டீசரை பார்க்கக்காத்துள்ளனர்.

 

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“அமைச்சராக இருந்தாலும் நானும் ஓர் எம்.எல்.ஏ. தான்”- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

G SaravanaKumar

“அடுத்த சீசனில் லக்னோ அணி இன்னும் வலிமையாக வரும்”

EZHILARASAN D

காந்திய வழியில் நாடாளுமன்ற விவாதம் – ராம்நாத் வலியுறுத்தல்

Mohan Dass