கல்கி உயிருடன் இருந்திருந்தால் மணிரத்னத்தை பாராட்டி இருப்பார்- பார்த்திபன்

பொன்னியின் செல்வன் நாவலை எழுதிய கல்கி உயிருடன் இருந்திருந்தால் மணிரத்னத்தை பாராட்டியிருப்பார் என நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.  மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா,…

பொன்னியின் செல்வன் நாவலை எழுதிய கல்கி உயிருடன் இருந்திருந்தால் மணிரத்னத்தை பாராட்டியிருப்பார் என நடிகர் பார்த்திபன் தெரிவித்தார். 

மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஜெயரம் ரவி, கார்த்தி, த்ரிஷா, நாசர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய நடிகர் பார்த்திபன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடிகர் பார்த்திபன் வணக்கம் தெரிவித்தார். எனக்கு ஹிந்தி தெரியாது என ஹிந்தியில் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், கல்கி இன்று உயிருடன் இருந்து இருந்தால் மணி ரத்னத்தை பாராட்டி இருப்பார். ஒரு புத்தகத்தில் படித்த பக்கத்திலும் படிக்காத பக்கத்திற்கு இடையில் மடித்த பக்கம் சில இருக்கும் அது அப்பறம் படிக்க வேண்டிய பக்கம். அது போல என்னுடையது ஒரு சிறிய கதாப்பாத்திரம். ரத்ன சுருக்கமா யார் வேணாலும் பேசலாம், ஆனா மணிரத்னம் மாதிரி சுருக்கமா யாரைலயும் பேசமுடியாது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.