ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்துள்ளார். அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி அளிக்கப்படவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
டிஐஜி சத்யபிரியா தலைமையில் 400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேள தாளம் முழங்க கட்டக்கூத்து நடனத்துடன் ராகுல் காந்திக்கு வரவேற்பு அளிக்க காங்கிரஸ் தொண்டர்கள் மட்டும் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
நினைவிட நுழைவாயிலில் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்ற உள்ளார் ராகுல் காந்தி.
இந்திய ஒற்றுமைப் பயணம் என்ற தலைப்பில் ராகுல் காந்தி இன்று தனது பாத யாத்திரையை தொடங்குகிறார்.
12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3500 கிலோ மீட்டர் தொலைவுக்கு 150 நாட்கள் பாத யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் நாளொன்றுக்கு 30 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தினந்தோறும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்.
இன்று மாலை கன்னியாகுமரியில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாத யாத்திரை தொடக்க விழா நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இன்று முதல் வரும் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் 59 கிமீ தொலைவுக்கு பாத யாத்திரை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி.
இன்று மாலை கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரை நிகழ்த்தவுள்ளார்.
முன்னதாக, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் ராகுல் காந்தி.
தொடர்ந்து அரச மரக் கன்றுகளை நட்டும் , நினைவிடத்தில் நடைபெறும் இசையஞ்சலி நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.








