பட்டினப்பிரவேச நிகழ்வில் அரசியல் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தருமபுர ஆதீன மடாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் அரசர்கள், மகான்கள் ஆண்டுக்கு ஒருமுறை வயது முதிர்ந்தோர், உடல் நலம் குன்றியோர் வழிபட ஏதுவாக பல்லக்கில் பட்டினப் பிரவேசம் மேற்கொண்டனர். பிற்காலத்தில் ஆண்டுக்கு ஒருநாளில் பட்டினப் பிரவேசம் மேற்கொள்வது வழக்கத்திற்கு வந்தது. அதனைத்தொடர்ந்து, 7-ஆம் நூற்றாண்டு முதல் மடாதிபதி ஆதீனங்கள் பட்டினப் பிரவேசம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பட்டினப் பிரவேசத்தின் போது பல்லக்கில் உலா வருவோர், சுமப்போர் எனும் வேறுபாடுகள் கருதப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது.
https://twitter.com/news7tamil/status/1528193968831606784
தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். 2019-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி புதிய ஆதீன மடாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு பட்டினப் பிரவேசம் மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, இரண்டு வருடங்கள் கொரோனா காரணமாக பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்நிலையில், இன்று நடைபெறும் பட்டினப் பிரவேசம் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது எனக்கருதி கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி தடை விதித்தார்.
அண்மைச் செய்தி: ‘அமலுக்கு வந்தது பெட்ரோல், டீசல் விலை குறைப்பு’
தடை உத்தரவுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், முதலமைச்சரை ஆதீனங்கள் சந்தித்து பேசியதில் சுமூக முடிவு எட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மே 8-ஆம் தேதி மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, பட்டின பிரவேச தடை உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி திட்டமிட்டப்படி ஒவ்வொன்றாக நடந்து வருகிறது, இந்நிலையில் இன்று மாலை பட்டினப்பிரவேசமும் நடைபெற உள்ளது. இந்நிலையில், பட்டினப்பிரவேச நிகழ்வில் அரசியல் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தருமபுர ஆதீன மடாதிபதி வெளியிட்டுள்ள வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








