பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு அமலுக்கு வந்ததுள்ளதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பாஜக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைவதை பாஜக கொண்டாடி வரும் நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பெட்ரோல் மீதான கலால் வரி 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். மேலும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்த அவர், ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு இந்த மானியம் வழங்கப்படும் என்றும் இந்த விலை குறைப்பால் Pradhan Mantri Ujjwala Yojana திட்டத்தின்கீழ் 9 கோடி மக்கள் பயனடைவர் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அண்மைச் செய்தி: ‘பெட்ரோல், டீசல் விலை குறைப்பு- தலைவர்கள் வரவேற்பு’
அதன்படி, இன்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் 102.58 ரூபாய்க்கு 1 லிட்டர் பெட்ரோல் விறபனை செய்யப்படுகிறது. அதேபோல, 94.19 ரூபாய்க்கு 1 லிட்டர் டீசல் விறபனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








