தெலங்கானா மாநிலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சேவலை லாக்கப்பில் வைத்த சம்பவம் அனைவராலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டம் ஜட்ஜெரலா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாட்டு கோழிகளை மர்ம நபர்கள் குறி வைத்து தொடர்ந்து திருடி சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் சேவல் திருட்டு விவகாரத்தில் பொதுமக்களிடம் பிடிபட்டார்.
கையும் களவுமாக பிடிபட்ட அந்த நபரை நாட்டு சேவல் ஒன்றுடன் காவல்
நிலையத்திற்கு அழைத்து வந்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்காக அந்த நபரை சிறையில் அடைத்த போலீசார் அவர் திருடி கொண்டு வந்த சேவலையும் லாக்கப்பில் சிறையில் வைத்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக காவல் நிலையத்திற்கு வந்து செல்லும் பொது மக்கள் சேவலை அடைத்து வைத்துள்ள போலீசாரின் செயலை பார்த்து லாக்கப் டெத் என்று
கூறி சேவலை சூப் வைத்து குடித்து விடாமல் இருக்க வேண்டும் என்று தங்களுக்குள்
பேசி செல்கின்றனர்.
இந்த நிலையில் சேவலை வெளியில் விட்டால் அதை யாராவது திருடி சென்று விடுவார்கள் என்பதால் பாதுகாப்பாக அடைத்து வைத்திருக்கிறோம் என்று போலீசார்
தெரிவித்துள்ளனர்.







