போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 19…

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 19 மாத திமுக ஆட்சியில் சட்டம் ஓழுங்கு சீர்கெட்டு விட்டதாக குற்றம்சாட்டி, கடந்த வாரத்தில் நடைபெற்ற குற்றச்செயல்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளார்.

டிசம்பர் 12ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 160 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் மற்றும் போதைப் பொருட்களை மத்திய வருவாய்த் துறையினர் கைப்பற்றியதையும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டதை குறிப்பிட்டுள்ள அவர், சென்னையில் இருந்து அத்தனை சோதனைச் சாவடிகளையும் தாண்டி போதைப் பொருட்கள் மண்டபத்துக்கு கடத்தப்பட்டது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே காவல்துறையினர் போதைப் பொருள் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, இத்தகைய அவலங்கள் தொடர்ந்தால் மக்கள் கொதித்தெழுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.