பொள்ளாச்சியில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார்

பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்து  அவர்களிடமிருந்து 11 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மற்றும் தங்க மோதிரங்கள், நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பொள்ளாச்சி அருகே…

பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்து  அவர்களிடமிருந்து 11 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மற்றும் தங்க மோதிரங்கள், நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே மூட்டாம்பாளையம் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடப்பதாக தனி பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற தனி பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த சோதனையில் கௌசிக் என்பவரது தோட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்த போலீசார் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 11 லட்சத்து 64 ரூபாயும் தங்க மோதிரங்கள் மற்றும் சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த சோதனையின் போது தப்பி ஓடி தலைமறைவாக உள்ள தோட்டத்து உரிமையாளர் கௌஷிக் என்பவரை நெகமம் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.