வாரவாரம் புதிது புதிதாகக் கேளிக்கைக்குப் பஞ்சமில்லாமல் OTT ல் பல படங்களும் சீரிஸ்களும் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரமும் பல சுவாரசியமான படங்களும் சீரிஸ்களும் வெளியாகி உள்ளது.
உலகப்புகழ் பெற்ற கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸின் தொடர்ச்சியாக்க மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பின்ஆஃப்,’ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 21)
முதல் HBO மற்றும் HBO மேக்ஸில் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தியாவில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திலும் வெளியாக உள்ளது. இத்த புது சீரிஸின் கதை “கேம் ஆஃப் த்ரோன்ஸ்” கதைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
போர்க் காலத்தை மையப்படுத்திய கதை என்பதால் பல சண்டைக் காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“கேம் ஆஃப் த்ரோன்ஸ்” கதையில் பல ராஜ குடும்பங்கள் அரியணைக்குச் சண்டையிட்டு வந்தன. ஆனால் இந்த “ஹவுஸ் ஆப் ட்ராகன்”” தொடரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரியணைக்குச் சண்டையிட உள்ளனர்.
மேலும் “கேம் ஆஃப் த்ரோன்ஸ்” தொடரில் வரும் 3 ட்ரேகன்கள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்த நிலையில் தற்போது “ஹவுஸ் ஆப் ட்ராகன்” தொடரில் 18 ட்ரேகன்கள் இடம்பெற உள்ளன.
நடிகர்கள் அருண் விஜய், வாணி போஜன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடித்த இத்தொடரை இயக்குனர் அறிவழகன் வெங்கடாசலம் இயக்கியுள்ளார். இத்தொடர் SonyLIV இல் ஆகஸ்ட் 19 வெளியாகியுள்ளது.
இது பைரஸி க்ரைம் பின்னால் இருக்கும் இருள் பக்கங்களைப் புரட்டும் ஒரு க்ரைம் தொடராகும். ருத்ரா என்ற காவல்துறை அதிகாரி, மிகப்பெரும் பட்ஜெட் படம் இணையத் திருடர்களினால் இணையத்தில் வெளியிடப்படுவதை எதிர்த்துப் போராடுகிறார். அதன் பின்னணியைக் கண்டுபிடிக்க முயல்வதை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் பங்கஜ் திரிபாதி, ஸ்ரீஜித் முகர்ஜியின் ஷெர்டில்: தி பிலிபித் சாகா திரைப்படத்தின் தலைப்பாகை, இது சனிக்கிழமையன்று நெட்ஃபிக்ஸ் இல் திரையிடப்பட்டது.
இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, பிலிபிட் புலிகள் காப்பகத்தின் எல்லையில் உள்ள கிராமங்களில் நடக்கும் நகரமயமாக்கல் மற்றும் மனித-விலங்கு மோதல்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
ZEE5 இல் துரங்கா 2020 ஆம் ஆண்டு கொரிய நாடகத் தொடரான ஃப்ளவர் ஆஃப் ஈவில்லின் இந்தி ரீமேக் ஆகும்.
போலீஸ் பெண்ணின் கணவர் ஒரு சீரியல் கில்லர் என்ற முரணான கதைக்களத்தைக் கொண்ட இந்த தொடரில், தொலைக்காட்சி நடிகை த்ரிஷ்டி தாமியின் நடித்துள்ளார். இத்தொடர் ஆகஸ்ட் 19 அன்று வெளியானது. ‘துர்கா’, கொரிய வெப் சீரிஸ் ‘ஃப்ளவர் ஆஃப் ஈவில்’ என்ற கொரியன் வெப் சீரிஸின் ஹிந்தி ரீமேக் ஆகும். இதுவே இந்தியாவில் ரீமேக் செய்யப்பட்ட முதல் கொரியன் சீரிஸாகும்.
5. சம்ஷேரா
ரன்பீர் கபூர் நடித்த ‘சம்ஷேரா’ திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 19) அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சஞ்சய் தத் மற்றும் வாணி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.











