ஆத்தூர் தொகுதியை மேம்படுத்துவேன் : பாமக வேட்பாளர் திலகபாமா

நான் வெற்றி பெற்றால் ஆத்தூர் தொகுதி முழுவதும் சீர்கெட்டுக்கிடக்கும் தொழில்வளங்கள், நீர் வளங்கள் சரி செய்யப்படும் என பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திலகபாமா உறுதி அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில்…

நான் வெற்றி பெற்றால் ஆத்தூர் தொகுதி முழுவதும் சீர்கெட்டுக்கிடக்கும் தொழில்வளங்கள், நீர் வளங்கள் சரி செய்யப்படும் என பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திலகபாமா உறுதி அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா, ஸ்ரீராமபுரம் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திலகபாமா இன்று ஸ்ரீராமபுரம் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் பரப்புரையின்போது பேசிய திலகபாமா ” இந்தத்தொகுதியில் தொழில் வளங்களும், நீர் வளங்களும் சீர்கெட்டுக் கிடக்கிறது. இதனைச் சரி செய்ய எனக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பளித்து 5 ஆண்டுகள் உங்கள் அருகிலேயே வைத்துக்கொள்களுங்கள். 20 ஆண்டுகள் பின்னோக்கியுள்ள தொகுதியை மேம்படுத்த வாய்ப்பு தாருங்கள். பெண்களுக்கு 1500 ரூபாய் பணம், 6 சிலிண்டர் இலவசம் என மக்கள் பயன்பெறும் வகையில் வாக்குறுதிகளை அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைந்திட நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் ‘எனக் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.