முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

கண்கலங்கிய முதல்வர், மன்னிப்புகோரிய ஆ.ராசா!

முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு மேலெழுந்த நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கோருவதாக திமுக எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஆ.ராசா சமீபத்தில் திமுக தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி குறித்தும் பிரதமர் குறித்தும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு மேலெழுந்தது. இந்த குற்றச்சாட்டையடுத்து ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பல அரசியல் கட்சியினரும், பெண்கள் அமைப்பினரும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத் தொடர்ந்து நேற்று (28/02/2021) திருவொற்றியூரில் அதிமுக வேட்பாளர் குப்பனுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, தனது தாய் குறித்து அவதூறாக பேசியதாக கூறி கண்ணீர் மல்க உரையாற்றினார். இதனையடுத்து ராசாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து நெருக்கடிகள் மேலெழுந்தன.

இந்நிலையில் இன்று காலை நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த ராசா, “ஸ்டாலின் அரசியல் ஆளுமையையும், முதல்வர் பழனிசாமியின் அரசியல் ஆளுமையையும் பற்றித்தான் பேசி விளக்கம் கொடுத்தேன். எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன்.முதல்வர் காயப்பட்டால் மன்னிப்பு கோருகிறேன்.” என்று தனது மன்னிப்பை தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய அரசியல் கட்சியின் முக்கிய அரசியலாளர் ஒருவர் பெண்கள் குறித்து இவ்வாறாக பேசியிருப்பதும், அதற்கு வெளிப்படையாக மன்னிப்பு கோரியுள்ளதும் அரசியல் தளத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹாக்கி விளையாடு ! கொண்டாடு ! – கனிமொழியின் பலே திட்டம்

Halley Karthik

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை -திருநாவுக்கரசர் எம்.பி

EZHILARASAN D

தேவர் சிலைக்கு தங்கக்கவசம்: மாறி மாறி உரிமைகோரும் இபிஎஸ் – ஓபிஎஸ்

EZHILARASAN D