இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில ஆளுநர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்பூசிகள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார். நாடு முழுவதும் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி திருவிழாவின் மூலம், மேலும் தடுப்பூசி மையங்கள் விரிவுபடுத்தப்பட்டதாகவும், புதிய தடுப்பூசி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமூக நிறுவனங்கள் மாநில அரசுகளுடன் தடையின்றி ஒத்துழைப்பதை உறுதி செய்ய ஆளுநர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.







