உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 17,963 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 85 நபர்கள் நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவின் 2-வது அலை பாதிப்பு அதிகரிப்பால், அனைத்து பள்ளிகளுக்கும் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை விடுமுறை வழங்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை இரவு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு (வயது 48) கொரோனா அறிகுறிகள் தென்பட்ட காரணத்தால், அவர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில், அவருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரையின்படி, தன்னை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளதாகவும் மேலும் அரசின் முக்கியப் பணிகளை காணொலி வாயிலாக கவனித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.







