முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

கர்ப்பிணி மகளை சுட்டுக்கொன்ற தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு!

ஓசூர் அருகே, மதுபோதையில், கர்ப்பிணி மகளை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள மாதையன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (60). இவர் மதுபோதையில் அவரது மனைவியான மாதவியுடன் தகராறில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, மதுபோதை அதிகமானதால், தமது மனைவியை கொல்லப்போவதாகக் கூறி நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து, சுட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அருணாசலத்தின், மகள் வெங்கடலட்சுமி (21) குறுக்கே புகுந்து தடுக்க முயன்றுள்ளார்.

அப்போது, அருணாசலம் சுட்டத்தில், வெங்கடலட்சுமியின் நெஞ்சு பகுதியில் குண்டு துளைத்துள்ளது. இதையடுத்து, வெங்கடலட்சுமி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திருமணமான வெங்கடலட்சுமி, மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தகவலறிந்து வந்த தளி பகுதி காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து தலைமறைவான அருணாச்சலத்தைத் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

வேளாண்துறைக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

Gayathri Venkatesan

குடும்பத் தகராறில் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

Saravana

இந்தோனேசியாவில் பயங்கர தீ விபத்து!

Jeba Arul Robinson