முக்கியச் செய்திகள் இந்தியா

ஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

டெல்லி லோக்கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் மாலை 6.15 மணி அளவில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு அவசர கூட்டம் கூடியது.

இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா , நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியாவின் மேற்கத்திய எல்லைகளில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2000க்கு முன்பு தலிபான்கள் பிடியில் ஆப்கானிஸ்தான் இருந்த போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தீவிரவாத தாக்குதல் அதிக அளவில் இருந்தது. சுமார் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தாலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் சென்றுள்ள நிலையில் பாதுகாப்பு தொடர்பான அவசர ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும், ஆப்கனில் தலிபான் ஆட்சி பொறுபெற்றுள்ள நிலையில் ரஷ்யா , சீனா உள்ளிட்ட நாடுகள் தலிபான் அரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவை தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த அவசர ஆலோசனை கூட்டத்தின் போது ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை இந்தியா பாதுகாப்பாக அழைத்து வருவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
SHARE

Related posts

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

Saravana Kumar

சுற்று சுவர் இடிந்து கிணற்றில் விழுந்த 3 பேர் உயிரிழந்தனர்

தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan