முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளிகள் திறப்பு குறித்து 20ம் தேதி முடிவு?

பள்ளிகள் திறப்பு தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

 

பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், சென்னையில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

முதலில் அரசு தேர்வுகள் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.  இதனைtத் தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்கக அதிகாரிகளுடனும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக அதிகாரிகளுடனும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளுடனும், தொடக்கக் கல்வி இயக்கக அதிகாரிகளுடனும் ஆலோசனை நடைபெற்றது.

பின்னர், முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், வரும் 20ஆம் தேதி முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாக கூறப்படுகிறது.

 

 

Advertisement:
SHARE

Related posts

மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் பொய்களை பேசி வருகிறார்; அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் விமர்சனம்!

Saravana

ரசிகரின் சாலையோர கடைக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த சோனு சூட்!

Jayapriya

நீட் தேர்வு எழுத அடுத்தாண்டு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Halley karthi