முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

‘முஜிப்’ உடை, காளி கோயில் வழிபாடு: வங்கதேசத்தில் மோடி!

வங்கதேசத்தின் பாரம்பரிய உடைகளில் ஒன்றான ‘முஜிப்’ உடை மற்றும் நூற்றாண்டுகள் பழமையான ஜெஷோரேஷ்வரி காளி கோயிலில் வழிபாடு என வங்கதேசத்தில் பிரதமர் மோடி இரண்டாவது நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்.

வங்கதேசத்தின் 50-வது ஆண்டு சுதந்திர தினம் மற்றும் வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிப் உர் ரஹ்மானின் நினைவு நாளில் கலந்துகொள்வதற்காக நேற்று பிரதமர் மோடி அந்நாட்டிற்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேசிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி வங்கதேச மக்களின் பாரம்பரிய உடையான ‘முஜிப்’ உடை அணிந்து நிகழ்ச்சியில் பேசினார். இந்த உடை வங்க தேசத்தின் தந்தையான ஷேக் முஜிப் உர் ரஹ்மானை அடையாளப்படுத்தும் உடையாகும். இதன்காரணமாக வங்கதேச மக்கள் இதனை ‘முஜிப்’ உடை என்றே அழைப்பார்கள்.


நிகழ்ச்சியில் தேச தந்தை காந்தியின் பெயரில் வழங்கப்படும் அமைதி விருதை ஷேக் முஜிப் உர் ரஹ்மானின் மகளான வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, அவருடைய சகோதரி ஷேக் ரஹினா ஆகியோருக்கு வழங்கினார். இந்தியா வங்கதேசத்தின் உறவை எடுத்துரைக்கும் வகையில் பிரதமர் மோடி ‘முஜிப்’ உடை அணிந்திருந்தார். பிரதமர் மோடி அணிந்திருந்த உடை இந்திய காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் கைத்தறியில் உருவாக்கப்பட்ட உடையாகும். வங்கதேச நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்ற இந்திய அதிகாரிகளும் ‘முஜிப்’ உடை அணிந்திருந்தனர்.


வங்கதேசத்தில் உள்ள இந்திய காதி மற்றும் கிராம தொழில் வாரியம் சார்பில் 100 ‘முஜிப்’ உடைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. வங்கதேச சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான இன்று காலை சட்கிரா மாவட்டத்தில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான ஜெஷோரேஷ்வரி காளி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

Advertisement:
SHARE

Related posts

ஹிப் ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் திடீர் முடக்கம்: ரசிகர்கள் அதிர்ச்சி

Gayathri Venkatesan

கேரளாவில் கடும் மழை: சபரிமலை கோயிலுக்கு செல்ல 21-ம் தேதி வரை தடை

Saravana Kumar

உழவர் சந்தைகள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Gayathri Venkatesan