அதிமுக ஆட்சிக்கு மக்கள் மட்டுமல்லாமல், இயற்கையும் சாதகமாக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணேச ராஜாவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கைக்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் இந்த ஆண்டு 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகியுள்ளதாகவும், அடுத்த ஆண்டு, 600 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து திட்டங்கள் நல்ல பலனை கொடுத்துள்ளதாகவும், தமிழகத்தில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.







