என்னுடைய அரசியல் வாழ்க்கையில் தொடக்கக்கால போராட்டங்களில் ஒன்றாக வங்க தேசத்தினுடைய விடுதலை போராட்டமும் இருந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வங்கதேசத்தின் 50வது சுதந்திர தினத்திற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்த பிரதமர் மோடி, தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் தொடக்கக்கால போராட்டங்களில் ஒன்றாக வங்க தேசத்தினுடைய விடுதலை போராட்டமும் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தன்னுடைய அரசியல் பயணத்தில் இது சிறப்பானதொரு தருணம் என்றும், தன்னுடைய அரசியல் நண்பர்களுடன் சேர்ந்து தானும் வங்க தேசத்திற்காக சத்தியாக கிரக போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக சிறை செல்லும் சந்தர்ப்பத்தையும் எதிர்கொண்டதாகவும் மோடி கூறியுள்ளார்.

தொடர்ந்து, வங்கதேசத்தை கட்டமைக்க உதவிய போர்வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் நாம் மறக்கக்கூடாது என்றும், அவர்களின் தைரியத்தையும், துணிவையும் நாங்கள் ஒருபோதும் மறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இரண்டு நாள் பயணமாக வங்கதேசத்திற்கு சென்ற பிரதமர் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமென்னுடன் தலைநகர் டாக்காவில் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.