வங்கதேசம் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 15 மாதங்களுக்கு பிறகு முதன் முறையாக பிரதமர் மோடி வங்கதேசம் இன்று சென்றுள்ளார். வங்க தேசத்தின் 50-வது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடிக்கு அந்நாட்டுப்…

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 15 மாதங்களுக்கு பிறகு முதன் முறையாக பிரதமர் மோடி வங்கதேசம் இன்று சென்றுள்ளார்.

வங்க தேசத்தின் 50-வது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடிக்கு அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசினா கடந்த மார்ச் தொடக்கத்தில் அழைப்புவிடுத்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த 15 மாதங்களுக்குப் பிறகு இன்று வங்கதேசம் சென்றடைந்தார். வங்க தேசம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் உடனான 1971ஆம் ஆண்டு போரில் உயிரிழந்த தியாகிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச விடுதலைப்படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். வங்கதேச விடுதலைக்கு இந்தியா ஆதரவு தெரிவித்ததுடன், பாகிஸ்தானுக்கு எதிராகப் போரிட்டது. இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் விளைவாகப் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் விடுதலை பெற்றது.

வங்கதேசம் சுதந்திரம் பெற்றதன் 50ம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வங்க தேசம் சென்றுள்ளார்.
தலைநகர் தாகா சென்ற அவரை, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 1971 ஆம் ஆண்டு போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன் தொடர்ச்சியாக நினைவிடத்தில் மரக்கன்றும் நட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.