காங்கிரஸ்தான் மதசார்பு அரசியலைக் கொண்டு வந்தது என அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பள்ளப்பட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த அவர், இஸ்லாமிய சமூகத்தினருக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
தொடர்ந்து வாக்காளர்களிடம் பேசிய அண்ணாமலை, காங்கிரஸ் ஆட்சியில்தான் மத அரசியல் கொண்டு வரப்பட்டு மதக் கலவரங்கள் நடந்ததாகக் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மதக் கலவரங்கள் குறைந்துள்ளதாகவும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.







