முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

முதல்வராகப் பதவியேற்ற பினராயி விஜயனுக்கு பிரதமர் வாழ்த்து!

கேரள முதலமைச்சராக, இரண்டாவது முறையாக பதவியேற்ற பினராயி விஜயனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரள சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து மார்க்சிஸ்ட் மாநில குழுவின் தலைமையில் நடந்த கூட்டத்தில் சட்டமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், முதல்வ ராகவும் பினராயி விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அவர் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பினராயி விஜயனைத் தொடர்ந்து கே ராஜன், ரோஷி அகஸ்டின், கே கிருஷ்ணன் குட்டி, ஏ.கே.சசீந்திரன், அகமது தேவர்கோவில், ஆண்டனி ராஜு, வி.அப்துர் ரஹ்மான், ஜி.ஆர்.அனில், கே.என்.பாலகோபால், ஆர்.பிந்து, ஜே.சிஞ்சு ராணி, எம்.வி.கோவிந்தன், பி.ஏ.முகமது ரியாஸ், பி.பிரசாத், கே.ராதாகிருஷ்ணன், பி.ராஜீவ், சஜிசெரியன், வி.சிவன்குட்டி, வி.என்.வாசவன், வீணா ஜார்ஜ் ஆகிய 20 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் 17 பேர் புதியவர்கள்.

இந்தப் பதவி ஏற்பு விழாவில், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியும் பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையாக முதலமைச்சர் பதவியேற்கும் பினராயிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

இந்தோனேசியா எரிமலை வெடிப்பு; 4,000 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சாம்பல்!

Nandhakumar

தோழிக்காக கொள்ளையனாக மாறிய யூடியூப் பிரபலம்!

Saravana Kumar

சீனாவில் எரிவாயு குழாய் உடைப்பு: அதிகரிக்கும் உயிரிழப்பு

Vandhana