முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்? அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள், அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நாதன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கொரோனாவால் அப்பாவிகள் பலர் உயிரிழந்து வருவதாகவும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி படுக்கைகளுக்கும், சாதாரண படுக்கைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனைகள் ஒரு நாளுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ரெம்டெசிவர் மருந்தை அரசு இலவசமாக வழங்குவதுடன், தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலில்கும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement:

Related posts

அப்டேட் கேட்ட ரசிகர்கள்! அறிக்கை விட்டு அட்வைஸ் செய்த அஜித்!!

Niruban Chakkaaravarthi

டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Gayathri Venkatesan

ரஜினியின் அறிவிப்பு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்; கமல்ஹாசன் கருத்து!

Saravana