உதயநிதி ஸ்டாலினின் மனு நிராகரிப்பு – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

தன்மீது தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, அதே தொகுதியில் போட்டியிட்ட மிலானி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் முடிந்து 45 நாட்களைக் கடந்த பிறகு வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அதனை நிராகரிக்க வேண்டும் என உதயநிதி தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, மிலானி தரப்பில், 45 நாட்களுக்குள் வழக்கு தொடரப்பட்டதாகவும், பதிவுத்துறை அதனை ஏற்று எண்ணிட்டுள்ளதால் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், பிரதான தேர்தல் வழக்கின் விசாரணையை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.