தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கருத்துத் தெரிவித்ததால் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம், வரகனேரி நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக தலா ரூ.2,000 கொரோனா நிதி உதவி வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டாவது தவணையாக ரூ.2,000 நிவாரணத் தொகை விரைவில் முழுமையாக வழங்கப்படும் என்றார். 12-ம் வகுப்பு இறுதித் தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கருத்துக்கேட்பு நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

அனைவருமே 12-ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருவதாக கூறிய அவர், நிச்சயம் 12-ம் வகுப்புக்கான தேர்வு நடத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். தேர்வின் வாயிலாக நல்ல மதிப்பெண்களைப் பெற்று மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம் என்றும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.