தொடர்ந்து 8 மணி நேரம் செஸ் விளையாடி உலக சாதனை படைத்த சட்டக் கல்லூரி மாணவர்…!

சட்டக் கல்லூரி மாணவர் கார்த்தி கணேஷ் எட்டு மணி நேரம் தொடர்ந்து 250 செஸ் போட்டிகளில் விளையாடி, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.  தூத்துக்குடி,  இன்னாசியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி கணேஷ். …

சட்டக் கல்லூரி மாணவர் கார்த்தி கணேஷ் எட்டு மணி நேரம் தொடர்ந்து 250 செஸ் போட்டிகளில் விளையாடி, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். 

தூத்துக்குடி,  இன்னாசியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி கணேஷ்.  இவர் நெல்லை அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.  இந்த நிலையில், கார்த்தி கணேஷ் தனது 7 வயது முதல் சதுரங்க விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ளார். மேலும், பல்வேறு மாவட்ட, மாநில, தேசிய, அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம் – மருத்துவமனை தகவல்!

அதனை தொடர்ந்து, சதுரங்க விளையாட்டு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சாதனை படைக்க வேண்டி தொடர்ந்து 8 மணி நேரம்  விளையாடக்கூடிய புல்லட் சதுரங்க போட்டியை ஆறு சிறந்த சதுரங்க வீரர்களுடன் விளையாடியுள்ளார்.

அதில், சுமார் 250 போட்டியில் விளையாடி  200க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு தொடர்ந்து,  100 புல்லட் சதுரங்க போட்டி விளையாடியதே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கார்த்தி கணேஷ் முறியடித்துள்ளார்.

இதை அடுத்து, நோபல் உலக சாதனை புத்தகம் சார்பில்,  அதன் தூதர் டாக்டர் பாலாஜி
சொக்கலிங்கம் கார்த்திக் கணேஷ்க்கு  சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.