”உலகக் கோப்பை போட்டியில் தாக்குதல் நடத்த உள்ளதாக மிரட்டல்” – காலிஸ்தான் தீவிரவாதி பன்னூனின் ஆடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
காலிஸ்தான் தனி நாடு கொள்கையின் ஆதரவாளர்களில் ஒருவரான குர்பத்வந்த் சிங் தடைசெய்யப்பட்ட Sikhs For Justice அமைப்பைச் சேர்ந்தவராக அறியப்படுகிறார். சமீபத்தில் கனடாவில் சுட்டுகொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாருடன் குர்பத்வந்த் சிங் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
குர்பத்வந்த் சிங் வின் தந்தை மொஹிந்தர் சிங் பண்ணு, பிரிவினைக்கு முன் தர்ன் தரனில் உள்ள பட்டி சப்-டிவிஷனின் நாது சாக் கிராமத்தில் வசித்து வந்தார். பிரிவினைக்குப் பிறகு, குடும்பம் அமிர்தசரஸின் கான்கோட் கிராமத்திற்கு மாறியது. இதன் பிறகு குர்பத்வந்த் சிங் பன்னூன் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிரிவினைவாத குழுவான சீக்கியர்களுக்கான SFJ நிறுவனர்களில் ஒருவராவார், மேலும் அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்தில் காலிஸ்தான் என்று அழைக்கப்படும் சீக்கியர்களுக்கான தனி மாநிலத்திற்காக தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டார்.
ஜூலை 2020 இல், மத்திய உள்துறை அமைச்சகத்தால் பன்னுன் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் பிரிவு 51A இன் கீழ் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் உத்தரவிட்டது. பன்னூன் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்தி வருகிறார் மற்றும் அவரது சொந்த மாநிலமான பஞ்சாபில் உள்ள சீக்கிய இளைஞர்களை தீவிரவாதத்தில் சேர ஊக்குவித்து வருகிறார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட SFJ அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுனின் சொத்துக்களை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் NIA பறிமுதல் செய்துள்ளது. அமிர்தசரஸில் உள்ள குர்பத்வந்த் சிங் பண்ணுவின் பூர்வீக கிராமமான கான்கோட்டில் உள்ள விவசாய நிலத்திலும் இதேபோன்ற அறிவிப்பு ஒட்டப்பட்டது. 2020ல் பதிவு செய்யப்பட்ட பயங்கரவாத வழக்கு தொடர்பாக, பண்ணுவுக்கு சொந்தமான 46 கானல் விவசாய நிலத்தை மத்திய புலனாய்வு அமைப்பு பறிமுதல் செய்தது.
இந்த நிலையில் குர்பத்வந்த் சிங் பன்னூன் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவிற்கு எதிராக ஒலி வடிவில் மிரட்டல் விடுத்துள்ள செய்திகள் சமூக வலைதளங்களின் வைரலாகி வருகிறது. இந்த மிரட்டலில் வரும் அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாக்குதல் நடத்த உள்ளதாகவும், அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்த தாக்குதலை திட்டமிட்டுள்ளதாகவும் குர்பத்வந்த் சிங் பன்னூனின் மிரட்டலில் அவர் பேசியுள்ளார்.
Canadian national and K-terrorist Pannu issues threats through recorded call; Says #CricketWorldCup will be ‘world terror cup’, ‘advises’ to shut down embassy in Canada. Says will especially target match played at Narendra Modi Stadium in Gujarat on Oct5.pic.twitter.com/vQKrRbzKbO
— Megh Updates 🚨™ (@MeghUpdates) September 27, 2023
“ஹர்திப் சிங் நிஜ்ஜார் படுகொலையில், நாங்கள் உங்கள் புல்லட்டுக்கு எதிராக வாக்குச் சீட்டைப் பயன்படுத்தப் போகிறோம். அதேபோல உங்களின் வன்முறைக்கு எதிராக வாக்குகளைப் பயன்படுத்தப் போகிறோம். இந்த அக்டோபரில் நடைபெறப் போவது உலக கோப்பையாக போட்டியாக இருக்காது. இது உலக பயங்கரவாதக் கோப்பையின் தொடக்கமாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.







