2ஆம் கட்ட சுற்றுப்பயணம் – தஞ்சாவூர் புறப்பட்டார் வி.கே.சசிகலா

2ஆம் கட்ட சுற்றுப்பயணமாக வி.கே.சசிகலா தஞ்சாவூர் புறப்பட்டார். தென்மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, இன்று காலை சென்னை திநகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கடந்த மார்ச் 4ம் தேதி…

2ஆம் கட்ட சுற்றுப்பயணமாக வி.கே.சசிகலா தஞ்சாவூர் புறப்பட்டார்.

தென்மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, இன்று காலை சென்னை திநகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கடந்த மார்ச் 4ம் தேதி அன்று புறப்பட்டார். அதில், முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்தார் சசிகலா.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் எனவும் அனைவரையும் ஒரே குடும்பத்துப் பிள்ளையாகப் பார்ப்பதாகவும் கூறினார். தொடர் தோல்விகளை சந்திக்க உள்ளதால் அதிமுக தொண்டர்கள் துயரத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் சசிகலாவின் வருகையை அறிந்து, அவருக்கு ஏராளமான தொண்டர்கள் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து 2ஆம் கட்ட சுற்றுப்பயணமாக இன்று தஞ்சாவூர் புறப்பட்டார்.

சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, செல்லும் வழியில் உள்ள பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்யவுள்ளதாகவும், ஆதரவாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.