சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் சசிகலா

தொடர் தோல்விகளை சந்தித்துள்ளதால் அதிமுக தொண்டர்கள் துயரத்தில் உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். தென்மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, இன்று காலை சென்னை திநகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.…

தொடர் தோல்விகளை சந்தித்துள்ளதால் அதிமுக தொண்டர்கள் துயரத்தில் உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

தென்மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, இன்று காலை சென்னை திநகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.

திருநெல்வேலி, திருச்செந்தூர், தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ள சசிகலா, தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் எனவும் அனைவரையும் ஒரே குடும்பத்துப் பிள்ளையாகப் பார்ப்பதாகவும் கூறினார். தொடர் தோல்விகளை சந்திக்க உள்ளதால் அதிமுக தொண்டர்கள் துயரத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.