ஹிஜாபுக்கு தடை – தமிழ்நாட்டில் வெடிக்கும் போராட்டங்கள்

கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்வதற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தமிழ்நாட்டில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைப்பெற்றன. கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்வதற்கு தடை விதித்த…

கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்வதற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தமிழ்நாட்டில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைப்பெற்றன.

கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்வதற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில், பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்ல நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கேயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தாம்பரத்தில் ஹிஜாபுக்கு தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவர் அமைப்பினர் பேரணியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். முஸ்லிம் பெண்கள் , கல்வி நிலையத்தில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் இருந்து சமூக நீதி மாணவர் இயக்கத்தினர் நூற்றுக்கணக்கானோர் பேரணியாக தபால் நிலையம் நோக்கி வந்தனர்.

அப்போது தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சமரசம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.